டில்லி

டைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நேரடி பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

விரைவில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெற உள்ளது.  தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம், நேரடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

நேற்று தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நடத்திய ஆய்வுக்குப் பிறகு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.   கூட்ட முடிவில் செய்தியாளர்களைத் தேர்தல் ஆணையர் சந்தித்து இந்த முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், ”தேர்தலையொட்டி வீடு வீடாகப் பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட் டுள்ளது.  ஆனால் ரோட் ஷோ, பாதயாத்திரைகள், சைக்கிள், பைக், வாகன பிரசாரம் மற்றும் ஊர்வலங்கள் எதுவும் பிப்ரவரி 11-ம் தேதி வரை அனுமதிக்கப் படாது” என்று கூறி உள்ளார்.