டில்லி,
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய முன்னேற்பாடு இன்றி அதிரடியாக அறிவித்ததால் மக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளானார்கள். அதைத்தொடர்ந்து ஒருசில இடங்களில் வரும் டிசம்பர் 15ந்தேதி வரை பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன் விவரம்…
• டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்
• மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில் கட்டணம் (ரூ. 2000 வரை ) .
• மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த
• ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்ய
• நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது (உரிய அடையாள அட்டைகளைக் காண்பித்து)
• மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க
• குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த
• அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில்
• மருத்துவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க
• ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்க
• விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க
• மயானங்கள் இடுகாடுகளில் கட்டணம் செலுத்து
• காஸ் சிலிண்டர்களை வாங்க
• ரயில்களில் உள்ள உணவகங்களில்
• புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க
• இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த
• மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள்,வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றை செலுத்த
• கோர்ட் கட்டணம் செலுத்த .
• அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க
இதுவரை அரசு அறிவித்துள்ள பட்டியல் இதுதான்.