சென்னை
காலை 10 மணி வரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.