வாஷிங்டன்: டிரம்ப், அமெரிக்க அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றத்தில்  டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

டிக்டாக் நிறுவனமானவது, அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை சீனாவிடம் பகிர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு அதிபர் டிரம்ப் தடை விதிப்பதாக அறிவித்தார்.

இந்த செயலியை அமெரிக்க நிறுவனம் வாங்க செப்டம்பர் 15ம் தேததி வரை அவகாசம் தருவதாகவும், அப்படி நடக்கவில்லை என்றால் டிக்டாக்கை தடை செய்வேன் என்று கூறி, அதற்கான உத்தரவில் அமெரிக்க டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந் நிலையில், அதிபர் டிரம்ப், வர்த்தக அமைச்சர் வில்பருக்கு எதிராக நீதி மன்றத்தில்  டிக்டாக் நிறுவனம் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,  தேசிய பாதுகாப்பு என்பதை முன்வைத்து தமது செயலிக்கு டிரம்ப் தடை விதிக்க முயற்சிக்கிறார், அதற்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.