வாஷிங்டன்: டிக்டாக் நிறுவனத்தின் ஷார்ட்-ஃபார்ம் வீடியோ-பகிர்வு செயலியில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை, அமெரிக்காவில் தடைசெய்த டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து டிக்டாக் நிறுவனமும், அதன் ஊழியர்களும் தனித்தனியாக வழக்கு தொடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, வேண்டுமென்றே சீன வெறுப்பை கிளப்பி விடுகிறார் டிரம்ப் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த செயலியைப் பயன்படுத்துவது அமெரிக்கப் பயனரின் தனியுரிமைக்கு ஆபத்து என்று டிரம்ப் நிர்வாக கூற்றையும் அவர்கள் மறுத்துள்ளனர். நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், சீன எதிர்ப்பு கோஷத்தை தூண்டிவிட்டு வெற்றிபெறுவதற்காகவே இத்தகைய நடவடிக்கை என்றுள்ளனர் அவர்கள்.

டிரம்ப்பின் நடவடிக்கை, தங்களின் அமெரிக்க செயல்பாடுகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளதாலும், வேலைவாய்ப்பு விசாவில் அமெரிக்காவில் பணிபுரிந்துவரும் 1500க்கும் மேற்பட்ட டிக்டாக் ஊழியர்கள் பணிவாய்ப்பை இழக்க வேண்டிவரும் இந்த வழக்கு தொடரும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.