டில்லி

ந்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததையொட்டி செயலி நிர்வாகம் இந்தியாவில் உள்ள 2000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்துள்ளது.

சீன ராணுவம் கடந்த வருடம் இந்திய எல்லையில் முகாம் இட்டதையொட்டி இந்தியாவும் தனது  படைகளை குவித்தது.  இந்நிலையில் சீனப்படைகள் அங்கிருந்து திரும்பி செல்வதாக போக்கு காட்டி இந்திய ராணுவத்தினரை கடுமையாக தாக்கியது.  இதையொட்டி இந்திய அரசு சீன வர்த்தகத்துக்கு பல தடைகளை விதித்தது.  அத்துடன் சீனாவின் 59 செயலிகளை தற்காலிகமாக இந்திய அரசு தடை விதித்த்து.

அப்போது இந்த செயலிகள் மூலம் இந்திய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இடையூறு உண்டாகலாம் என தடை விதிக்கபட்டது.   இந்த தடையை அடுத்து அமெரிக்காவிலும் இதே காரணம் காட்டி முன்னாள் அதிபர் டிரம்ப் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்போவதாக எச்சரித்தார்.  ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக் செயலி கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்திய் அரசு இன்று டிக்டாக் செயலி உள்ளிட்ட அனைத்து செயலிகளையும் நிரந்தரமாக தடை செய்வதாக அரிவித்தது.  டிக்டாக் செயலிக்கு தற்காலிக தடை விதித்த போதும் இந்தியாவில் உள்ள அந்த செயலியில் அலுவலகம் பல மாதங்களாக தொடர்ந்து இயங்கி வந்தது.   தற்போது இந்திய அரசு இந்த தடையை நிரந்தர்மாக்க போவதாக தெரிவித்ததால் டிக்டாக் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதையொட்டி நிர்வாக்ம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாங்கள் இந்த தடை தற்காலிகமானது எனவும் விரைவில் அது விலக்கப்படும் எனவும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம்,.  எனவே அலுவலகத்தை நாங்கள் மூடவில்லை.  தற்போது இனி இந்த செயலி இந்தியாவில் செயல்பட வாய்ப்பில்லை என்பதால் நாங்கள் இங்கு பணி புரியும் 2000க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்ய உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.