உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து. டிக்டாக் செயலி மூலம் தமிழகத்திலும், தமிழர்களிடையேயும் பிரபலமானவர். அவ்வப்போது பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அசத்துக்கும் ஜிபி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரொம்ப இயல்பாக எதார்த்தமாக இவர் பேசும் நெல்லை பாஷைக்கும் வார்த்தைக்கும் ரசிகர்கள் அதிகம்.
மரக்கடை ஒன்றுக்கு சொந்தக்காரராக இருக்கும் இவர் தொழிலை கண்டுகொள்ளாமல் டிக்டாக்கிலேயே மூழ்கியதால் குடும்பத்தினரின் அதிருப்திக்கும் உள்ளானார். எந்நேரமும் டிக்டாக்கில் இருந்ததற்காக இவரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வெறுப்பு ஏற்பட்டதாகவும்தகவல் வெளியானது. இதுபற்றி அவரே வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
டிக்டாக் பேன் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கும் வீடியோ போட்டவர், சமீபத்தில், குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதற்காக இவர் மீது முதல் அமைச்சரின் தனி பிரிவுக்கு புகாரும் அளிக்கப்பட்டு விசாரணைக்கு சென்றுவந்தார்.
அதைத்தொடர்ந்து முத்து கண்ணீருடன் வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், . ‘போலீஸ் கூப்பிட்டாங்க.. போனேன்.. 3 நாளா சாப்பிடல.. ஆனால் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க” என்று கூறுகிறார்.
எப்படியோ இவர் முகம் அனைவருக்கும் தெரிய துவங்கியதும், இவர் ரவுடி பேபி சூர்யாவுடன் செய்த காதல் லீலைகள் பல. சூர்யா ஜி.பி.முத்துவை மாமா என அழைக்க, அதற்கு இவர் அன்பே… ஆருயிரே என உருகிய வீடியோக்கள் டிக்-டாக்கில் ரொம்ப பிரபலம். சூர்யாவுடனான ஜிபி முத்துவின் நெருக்கத்தை பார்த்து டிக்-டாக்கில் அவருடன் மல்லுக்கு நிற்காத ஆட்களே கிடையாது.
காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர்தான் ஜி.பி.முத்து என்றாலும் தவறில்லை. வான்டடாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்ட ஜிபி முத்துக்கு டிக்-டாக் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜி.பி. முத்து திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் உண்மை என்ன என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானவர்கள் ஏராளமானோர்.. இதில், ஆட்டம், பாட்டம், துக்கம், சந்தோஷம், தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்தவர்கள் இன்னும் ஏராளம்!