சேலம்:

ருமபுரி காவல் நிலைய வளாகத்தில்  வைத்து டிக் டாக் வீடியோ எடுத்து, அதை வெளியிட்ட இளைஞர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாடு முழுவதும்   ‘டிக் டாக்’ செயலிக்கு அடிமையாகும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இல்லத்தரசிகள் தொடங்கி வயதானவர்கள் வரை டிக்டாக் செயலியில் புகுந்து விளையாடி வருகிறார்கள். இந்த செயலியில்  அதிகளவு வீடியோ பதிவிடப்பட்டு வருகிறது. . இந்தியாவில் டிக்டொக் செயலின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தருமபுரி அருகே உள்ள  அதியமான் கோட்டை காவல் நிலையத்தை டிக்டாக்  செயலி மூலம் கிண்டல் அடித்து, வீடியோ வெளியிட்ட  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களான  ஆதிகேசவன், வினோ, மதன்குமார் ஆகியோர் டிக் டாக் வீடியோ பதிவு செய்து, அதை  இணையத்தில் வெளியிட்டது தெரிய வந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்ட பலர், இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை ஆய்வு செய்த காவல்துறையினர், இளைஞர்களின் இந்த செயலை சட்டவிரோதமாக கருதி, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 3 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 3 இளைஞர் களையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.