இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

2018 ம் ஆண்டு 2197 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வளர்ச்சியைக் கண்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2006 ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,682 ஆக உயர்ந்திருப்பதை அடுத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 785, கர்நாடக 563, உத்தரகாண்ட் 560, மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளது.

இந்திய அளவில் புலிகள் எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தில் தமிழகத்தில் முதுமலையில் 114, சத்தியமங்கலத்தில் 85 புலிகள் உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூரில் 150 ம், நாகர்ஹோலே-வில் 141 புலிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.