நெல்லை

ன்று திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

”கோட்டைகருங்குளம் மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் இன்று (4.6.2025) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம், பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் இன்று (4.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.”

என அவறிவித்துள்ளார்.

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

”கல்லிடைக்குறிச்சி கோட்டம்- ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், விக்கிராமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் இன்று (4.6.2025) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமின் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம் மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், இரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனுர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர், காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளயூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் இன்று (4.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.”

என அறிவித்துள்ளார்.