சென்னை: மதுரையில் அமைக்கப்படும் டைடல் பார்க் மொத்தம் 12 மாடிகளைக் கொண்ட மிக பிரமாண்டமான கட்டிடமாக உருவாக உள்ளது. மாட்டுத்தாவணியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இது கட்டப்பட உள்ளது. இதன் மொத்த கட்டமைப்பு பரப்பளவு 6,40,000 சதுர அடி இருக்கும். இந்த திட்டம் 2026ல் செயல்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரில் ஒரு டைடல் பூங்கா நிஜமாக மாறும் விளிம்பில் உள்ளது. மதுரை மக்கள் தங்கள் பகுதியில் புதிய முதலீடுகள் வருவதில்லை என புலம்பி வந்த நிலையில், கோயம்புத்தூர்-க்கு இணையாக மதுரையை ஐடி நகரமாக மாற்றும் இலக்குடன் அடுத்தடுத்து பல ஐடி துறை சார்ந்த கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் உச்சமாக தற்போது மதுரையில் அமைக்கப்படும் புதிய டைடல் பார்க் உள்ளது.
2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 12 மாடிகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகம் கட்டும் திட்டம், மாட்டுத்தாவணியில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 5. ஏக்கர் நிலப்பரப்பில் டைடல் பூங்கா அமைக்க டைடெல் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகருக்கு அருகில் இருக்கும் கருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் நியோ டைடல் பார்க் (TIDEL Neo Park) கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாக வெளியான புகைப்படும் இணையத்தில் வைரலாகியிருந்த நிலையில், தற்போது மதுரை டைடல் பார்க் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மதுரை டைடல் ஐடி பார்க் பேஸ்மென்ட், தரைதளம் டன் (B+G+12) 12 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டடமாக அமையப்பட உள்ளது.மதுரை டைடல் பார்க் சுமார் ரூ.340 கோடி முதலீட்டில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட உள்ளது டைடல் பார்க்-ன் படி 50000 முதல் 1 லட்சம் சதுரடி கொண்ட ஐடி பார்க் நியோ டைடல் பார்க், மதுரை டைடல் பார்க்-ன் கட்டமைப்பு பரப்பளவு மட்டும் 6.4 லட்சம் சதுர அடி. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் டைடல் அமைப்பு மாட்டுத்தாவணியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் IGBC சான்றிதழ் பெற்ற அலுவலக வளாகமாக (Indian Green Building Council) கட்டப்பட உள்ளது.
இதன் கட்டுமானத்தை 2026குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான திட்டத்தை Tata Consultancy Engineering நிறுவனம் கட்டுவதாக கூறப்பட்டு உள்ளது. மதுரை டைடல் பார்க்-ன் கட்டிடக்கலை ஆலோசகரா Edifice CPL நிறுவனம் செயல்பட உள்ளது, மேலும் இதன் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள டைடல் பார்க் போல், மதுரையிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சிறந்த கட்டமைப்பை வழங்கும் இந்த டைடல் பார்க், மதுரையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்க சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மதுரையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், மதுரை நகரின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். மதுரையில் திறமையான இளைஞர்கள் எக்கசகமாக இருந்தாலும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் அனைவரும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் மதுரையில் டைடல் பார்க் அமையவுள்ளதால், இனி இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் புதிய முதலீடுகளும் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.