பெய்ஜிங்:
ந்தியாவுக்கு, இமயமலை வழியாக  ரெயில்விட சீனா திட்டம் வகுத்துள்ளது.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தரை மார்க்கமாக ரெயில் போக்குவரத்து விட சீனா புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
train thopet
இந்தியாவை அடுத்துள்ள திபெத், நேபாளத்தை இணைத்து இமய மலை வழியாக இந்தியாவுக்கு வழியாக ரயில் விட சீனா புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதன்படி கடல் மட்டத்தில் இருந்து 3800 மீட்டர் உயரத்தில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனா தனது பொருளாதாரத்தை பலப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தவும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஆசிய கண்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் செல்ல வசதியான வழிகளை கண்டறியும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனா-திபெத் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பெய்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்ப துணை இயக்குனராக உள்ள சாங் காங் இதுதொடர்பான அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்.

இமயமலை
இமயமலை

அதில் இமயமலையில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சீனாவுக்கு சாத்தியமான, லாபகரமான ஒன்று என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பணிகளை சீன அரசு தொடங்கி உள்ளது.
சீனாவின் மற்ற பகுதியில் இருந்து திபெத் மாகாண தலைநகர் லாசாவை இணைக்கும் வகையில் 1100 கிமீ தூரம் ஏற்கனவே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. லாசா கடல் மட்டத்தில் இருந்து  3,700 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து 250 கிமீ தூரம் உள்ள ஜிக்கேஸ் நகருக்கும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு விட்டன.
தற்போது ஜிக்கேஸ் நகரை மையமாக கொண்டு 3 விதமான ரயில் பாதைகளை எல்லையோரம் அமைக்க சீனா முடிவெடுத்துள்ளது. இதில் ஒரு பாதை நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு செல்லும் வகையில் முடிவெடுக்கப்பட்டுள்து. இதற்காக இமயமலையில் உள்ள எவரெஸ்ட்டை குடைந்து குகை உருவாக்கப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. லாசாவில் இருந்து காத்மாண்டு சுமார் 540 கிமீ  தூரத்தில் உள்ளது. அங்கு அதிவேக ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக , ஜிக்கேசில் இருந்து இந்திய மாநிலமான சிக்கிம் எல்லையில் உள்ள யாடாங்கிற்கும், மூன்றாவதாக ஜிக்கேசில் இருந்து உத்தரகாண்ட் எல்லையில் உள்ள புராங்கிற்கும் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
ஜிக்கேஸ் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3,800 மீட்டர் உயரத்திலும் உள்ளது. இந்த 3 தண்டவாளங்களும் அமைக்கும் பணி 2020ல் முடிவுக்கு வரும் என்று சீனா சொல்கிறது.
ஜிக்கேசில் இருந்து காத்மாண்டுவுக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடர்பான ஒப்பந்தத்தில் நேபாள பிரதமராக இருந்த சர்மா ஒலி சீனாவுடன் கையெழுத்திட்டார்.
ரெயில் மற்றும் சாலை வழியாக நேபாளத்துடன்  இணைந்தால் அந்த வழியாக இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் அதன் சரக்கு பொருட்களை எளிதாக கொண்டு செல்ல சீனா இந்த பணிகளை வேகப்படுத்தி உள்ளது.
குறிப்பாக இந்திய சந்தையில் சீன பொருட்களை குவித்து பொருளாதாரத்தை பெருக்க திட்டமிட்டு வருகிறது. அதை தொடர்ந்து இந்த ரயில் தண்டவாளத்தை இந்தியாவுடன் இணைக்கவும், பயணிகள் ரயிலையும், சரக்கு ரயிலை இயக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோட்டமாகத்தான் கடந்த ஆண்டு திபெத் எல்லை வழியாக இந்திய பக்தர்கள் கைலாஷ் மற்றும் மான்சரோவர் செல்ல சீனா மலைப்பாதையை திறந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.