சென்னை:
சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வந்தது. இதனால் வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் மக்கள் கடுமையான புழுக்கத்துக்கு ஆளாகி, என்ன செய்வதென்பது தெரியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை தூற ஆரம்பித்தது. வடசென்னை பகுதியில் மாலை 3 மணி அளவில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யத் தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன், தொடர்ந்து நார்மலாக மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே ஈரப்பதம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்’ என தனியர் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், இன்று சென்னையில் மழை பெய்து வருவது மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.