சென்னை

திமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்களை நிக்கியதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.   இதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினர் தினகரன் ஆதரவாளர்களை அதிமுக வில் இருந்து நேற்று விலக்கி உள்ளனர்.   இது குறித்து துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில். “பலவீனமான மனிதர்கள் ஆறுமாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.   ஆண்மையற்ற தலைவர்கள்.   ஆர் கே நகர் தோல்வியின் அதிர்ச்சியால் தினகரனின் ஒன்பது ஆதரவாளர்கள் மீது சவுக்கை சொடுக்கி உள்ளனர்”  என பதிந்துள்ளார்.

அவருடைய இந்த கடும் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.