இஸ்லாமாபாத்:
நவாஸ் ஷெரீப் ஊழல் காரணமாக பதவி விலகிய, லாகூர் தொகுதியில் அவரது மனைவி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் அவதிப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பனாமா பேப்பர் ஊழல் வழக்கு காரணமாக சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் நவாஸ் ஷெரீப் நீக்கப்பட்டார். அவரது மனைவி குல்சூம். இவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் காலியாக உள்ள லாகூர் எம்.பி. பதவிக்கான தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தான் நிற்பதாக கூறியுள்ள குல்சூம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் குல்சூம் நவாஸ் கடுமையான தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்த லண்டன் டாக்டர்கள் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும், எனவே அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டார் என அவரது குடும்ப மருத்துவர் கர்மானி தெரிவித்தார்.
இவருக்கான தேர்தல் பிரசார பணிகளை மத்திய வர்த்தக மந்திரி பெர்வைஷ் மாலிக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.