புதுடெல்லி:

மீண்டும் பிரதமர் ஆகலாம் என்ற மோடியின் பெரும் கனவை கலைக்கப் போவது சக்திவாய்ந்த 3 பெண்கள் தான்.


மீண்டும் பிரதமராகிவிடவேண்டும் என்பதே மோடியின் பெரும் கனவாக இருக்கிறது. இந்த கனவை நனவாக்க பாஜக பல வழிகளை கையாண்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில், மோடியா? லேடியா? என்ற கேள்வியை தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா எழுப்பினார். லேடி தான் என்று தமிழகம் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது.

வரும் மக்களவைத் தேர்தலில் சக்திவாய்ந்த 3 பெண்கள் மோடியின் பிரதமர் கனவை தகர்க்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.

பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. இவரது வருகை உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும், உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்துப் போராடுவதில் ஒரு அணியில் உள்ளனர்.
பாஜக அணியை விட, எதிர்கட்சிகளிடம் சக்திவாய்ந்த பெண் தலைவர்கள் உள்ளனர்.

இது எதிர்கட்சிகளுக்கு சாதகமாகவே கருதப்படுகிறது. இவர்களுக்கு பெண்கள் வாக்குகளை கவர்வதற்கான வாய்ப்பு இயற்கையிலேயே அமைந்துவிட்டது.

எனினும், பாஜக தரப்பில் இதை மறுக்கிறார்கள்.
பெண் கல்வி, பெண் பாதுகாப்பு, சிலிண்டர் மானியம் ஆகியவற்றை செயல்படுத்தி பெண்கள் முன்னேற்றத்துக்காக அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

26 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில், 6 பெண்கள் இடம்பெற்றிருப்பதும் மோடி பெண்களுக்கு ஆதரவானவர் என்பதை பறைசாற்றும் என்கிறார்கள்.