ஜெசிகா, பென்னி மற்றும் லிசா ஆகிய மூன்று பெண்கள் கல்லூரி தோழிகளாக இருந்தபோது, 1992ல் வாஷிங்டன்னில் பெண்ணுரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது, 2017ம் ஆண்டு, அவர்கள், வெவ்வேறு நகரங்களில் வாழும், முழுநேரமாக வேலை-பார்க்கும் தாய்மார்கள்.
அதனால் அவர்களால் ஒரு மறு-சந்திப்பை திட்டமிடுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. 1992 ல், நியூ ஜெர்சி ரட்ஜர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள், வாஷிங்டனில் நடைபெற்ற பெண்கள் உரிமைக்கான அணிவகுப்பில் பங்கேற்க விடியற்காலை நான்கு மணி பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். கருக்கலைப்பு தொடர்பாக பென்சில்வேனியாவின் சட்டரீதியான ஏற்பாடுகளைச் சவால் விடும்விதமாக உச்ச நீதிமன்றத்தின் திட்டமிட்ட பேரன்ட்ஹூட் வழக்கு பெண்ணுரிமையைவீழ்த்திவிடுமென அச்சுறுத்தல் இருந்தது.
இது குறித்து மூன்று தோழிகளில் ஒருவரான சிஸ்டோ,”22 வயதே ஆகிய நாங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல், தள்ளு வண்டியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு நிற்கும் பெற்றோர்கள், ஆண்கள், பெண்கள், மற்றும் பிள்ளைகள் அடையாளப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்த்து ஊக்கங்கொண்டோம்”, “நாங்கள் அதிகமாகச் சிந்திக்கவோ திட்டமிடவோ இல்லை, உடனடியாகப் பேருந்தில் ஏறிக் கொண்டோம்,” என்று நினைவு கூர்ந்தார். முற்போக்கான எண்ணமும் மற்றும் அரசியல் ரீதியாகச் செயலூக்கம் இருந்த ரட்கர்ஸின் சூழலும், அதே போல் அவர்கள் பாலினப் பிரச்சினைகள்பற்றி எழுதிய கட்டுரைகளும் தான் இம்மூவரை போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டியது என்று அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். உச்ச நீதிமன்றம் இறுதியில் ரோய் வி.
வேட்டின் அடிப்படை தீர்ப்பை உறுதி செய்தது. அதன் பின் பல ஆண்டுகளுக்கு மூன்று பெண்களும் திருமணங்கள் மற்றும் விடுமுறைகளுக்குச் சந்தித்து நல்ல நண்பர்களாக இருந்தனர். 90 களில் அணிந்த ஆடைகளுடன், இயற்கை வரலாற்றின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள பழைய புகைப்படத்தில் மூன்று இளம் பெண்களும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், அவர்கள் அதே நிலையில் நின்று ஒரு பெரிய சிரிப்புடன் அந்தப் புகைப்படத்தை மீண்டும் எடுக்கப் போகின்றோம் என்று அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்ததில்லை.
பின்னர் தேர்தல் நடந்தது. “நான் தேர்தலின்போது நடந்த சில நிகழ்வுகளையும் காட்சிகளையும் பற்றிச் சிந்திக்கும்போது, டொனால்டு டிரம்ப் ரன் பெண்களை எப்படி நடத்துகிறார் என்று தெரிந்து கொண்டேன்” என்று ஜெசிகா சிஸ்டோ தனது சான் பிரான்சிஸ்கோ வீட்டில் அமர்ந்த படியே வெறுப்புடன் கூறினார். சிகாகோவில், ஜெனிபர் “பென்னி” மார்டினண்ட், “தேர்தல் நடந்து முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மனநிம்மதிக்காக நான் சிஎன்என் சேனல் பார்ப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இது மிகவும் கோரமான நிகழ்வு” என்று அவரது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். லோவர் மன்ஹாட்டனில் வாழும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் நிதி வழக்கறிஞருமான லிசா லெவின் இதை முழுமையாக ஆமோதித்தார்.
“பாலின வேறுபாடு மற்றும் இனவாதம் மிகுந்த வருத்தை அளிக்கிறது. பள்ளிகளில் ஸ்வஸ்திகாஸ் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்,” என்று அவர் கூறினார். அதனால், வேலை நாட்கள் மற்றும் விளையாட்டு தேதிகளின் இடையே, அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டதில் பங்கேற்பதற்கான நேரம் இது என்று முடிவு செய்தனர். ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு மகனுக்கும் இரண்டு மகள்களுக்கும் தாயாருமான மார்டினான்ட், இது தனக்காக மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்காகவும் செய்வதாகக் கூறினார். “எனது 15 வயது பிள்ளை அடுத்த முறை வாக்களிக்க முடியும், நான் போய் பேசிப் பங்கேற்று ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு நிர்வாகப் பயிற்சியாளரும் தலைமை ஆலோசகருமான சிஸ்டோ, அவரது நண்பர்களைப் பார்த்து அவரது எண்ணங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்குக் கடலோரப் பகுதிகளிலிருந்து பறந்து வாஷிங்க்டன் வந்தார். அவரும் தன்னுடைய 5-வயது மகளுக்காக அணிவகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறுகிறார். “பெண்ணுரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் என எனது மகளிடம் ஒரு நாள் பெருமிதத்தோடு சொல்ல முடியும் என்பதை நினைக்கும்போது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது.” “துரதிர்ஷ்டவசமாக, 25 ஆண்டுகளில் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்று நினைக்கிறேன்,” லெவின் கூறினார். “நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் நினைத்தேன் ஆனால் இந்தத் தேர்தல் சுழற்சியிலிருந்து எனக்கு தெளிவாகப் புரிந்தது என்னவென்றால் எதுவும் இன்னும் பெரிதாக மாறவில்லை” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஏதேனும் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் சமத்துவத்திற்காக போராடுவது முக்கியம் என்று மட்டும் கூறுகிறார். “நீங்கள் அமைதியாக இருந்தால், சில விஷயங்களை மாற்றுவது மிகவும் கடினம் ” என்று அவர் கூறினார். “இன்னும் பல பெண்களுக்குப் பெண் உரிமை மற்றும் சமத்துவம் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவர்களுக்குக் குறைந்த ஊதியம் கிடைக்கும்போது அமைதியாக இருக்கின்றனர். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்கள்மூலம் அவர்கள் பெண்ணுரிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் ” என்று சிஸ்டோ கூறினார். இம்மாதிரியான நாடு தழுவிய பேரணிகள் நடந்தால் மாற்றங்கள் ஏற்படும் என்று மூன்று பெண்களும் நம்புகின்றனர்.