ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து ஜே.கே காவல்துறை, சி.ஆர்.பி.எப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் . இதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் சில ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய பாதுகாப்புப் படை அதிகாரிகள்,  ஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மாலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இரவு வரை இந்த சண்டை நீடித்தது. புதன்கிழமை அதிகாலையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா். அடுத்த சில மணி நேரங்களில், மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

மேலும், எல்லையில் துப்பாக்கிகள், வெடி பொருள்கள் மீட்பு: காவல்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபா் அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கோட்டுப் பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடி பொருள்களை பாதுகாப்புப் படையினா்  மீட்டனா்.