புதுடெல்லி:

இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200-கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈஸ்டர் நாளில் சர்ச்களிலும், நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கைக்கான இந்திய தூதரிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து இந்திய தூதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த லேகாஷினி, நாராயன் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும் விவரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அனைத்து மனிதாபிமான உதவிகளை செய்யவும், மருத்துவக் குழுவை அனுப்பவும் தயாராக இருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரிவித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.