நாடு முழுதும் கொரோனா தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேலையில் மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நிறுவனம் தயாரிக்கும் மருந்துக்கு, மத்திய அரசுக்கு ரூ. 150 என்றும் மாநில அரசுக்கு ரூ. 400 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 என்றும் ஒரே மருந்துக்கு மூன்று விதமாக விலை நிர்ணயம் செய்திருப்பது, எரியும் வீட்டில் பிடுங்கும் செயல்.
முறையான மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை, என்று அனைத்தும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் வேலையில்.
தடுப்பூசியையாவது அனைவருக்கும் இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்ளாமல், 18 முதல் 45 வயது உள்ளது இளைய சமுதாயத்தினருக்கு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்திருப்பது தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான நடவடிக்கை.
மக்கள் மீது அக்கறை உள்ள எந்த ஒரு தலைவரும் முன்னுதாரணம் இல்லாத இதுபோன்ற பேரழிவு நேரத்தில் நியாயமான அணுகுமுறையை கையாள்வதே இயல்பு, அதனால், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற்று மாநில அரசுகளின் நலனையும் மக்களின் நலனையும் காக்கவேண்டும்.
மத்திய அரசு ஒதுக்கீடாக உள்ள 50 சதவீத மருந்து பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் வெளிப்படையான அறிக்கை அளிக்கவேண்டும் என்று சோனியா காந்தி தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.