சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா மற்றும் கூட்ட நெரிசலை முன்னிட்டு சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பயணிகள் மட்டும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

இடையில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் பயணிகள் இறங்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.