சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் டெல்லி இமாம் தப்லிஜி மாநாட்டுக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு, 459, 375 கண்காணிக்கப்படுவதாவும், மற்றும் 274 பேரை குணப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ள 3 மண்டலங்களை, சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறிவித்து, ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அண்ணா நகர் 547 வழக்குகள், தேனாம்பேட்டை 493, கோடம்பாக்கம் 405 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், இந்த மண்டலங்கள் கெலாரோனா ஹாட்ஸ்பாட் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில், கொரோனா பாதிப்புள்ள ராயபுரம் (63 பேர்), திருவிக நகர் (26 பேர்) உள்ள தண்டையார்பேட்டை 17, மாதவரம் 3, திருவொற்றியூர் 4, அண்ணாநகர் 22, தேனாம்பேட்டை 14, கோடம்பாக்கம் 22, வளசரவாக்கம் 4, ஆலந்தூர் 2, அடையாறு 6 பெருங்குடி 6, சோழிங்கநல்லூர் 2 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு கோடி பேரை சோதனை செய்துள்ள ஊழியர்கள் , காய்ச்சல், சளி இருக்கிறதா, முதியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என பல விவரங்களை கேட்டுப் பெறுகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 3 ஆயிரத்து 036 பேருக்கு காய்ச்சல், சளி என கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 775 பேர் திவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டாலும், ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழ்நாடு வந்தபின் நடைபெறவுள்ள விரைவு சோதனைகளில் மேலும் பாதிப்பு நிலவரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள ராயபுரம், திருவிக நகர் பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வரவேண்டும். பக்கத்து வீட்டார்களிடம் பேசக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் பெறப்படும் குப்பைகள் வழக்கமாக கொண்டு செல்லும் இடத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னையின் 3 முக்கிய சென்னை மண்டலங்களில் 48% பாதிப்பு உள்ளதாகவும், இந்த மண்டலங்கள் கொரோனா அறிகுறிகளுக்கான ஹாட் ஸ்பாட்கள் என்று சென்னை மாநகராட்சி தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, அண்ணா நகர் (மண்டலம் 8 – 547 பேர் பாதிப்பு), தேனம்பேட்டை (மண்டலம் 9 – 493 பேர் பாதிப்பு) மற்றும் கோடம்பாக்கம் (மண்டலம் 10 – 405 பேர் பாதிப்பு) உள்ளதாக கூறப்பட்ட உள்ளது.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, சென்னை நகரில், 1.05 கோடி வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளதாகவும், நகரத்தில் 93% சோதனை முடிவடைந்து உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.