இது புதுசு!: பச்சமுத்து மீது கொலை மிரட்டல் புகார்!

Must read

மருத்துவக்கல்லூரி சீட் விவகாரத்தில் மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீது இன்று கொலை மிரட்டல் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

பச்சமுத்து
பச்சமுத்து

திரைப்பட தயாரிப்பாளர் மதன், மற்றும் பச்சமுத்து ஆகியோர் தன்னிடம் படம் தயாரிக்க பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டார்கள் என்று ஏற்கெனவே திரைப்பட பைனான்சியர் போத்ரா புகார்  அளித்திருந்தார். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  மீண்டும் ஒரு புகார் அளித்தார்.
 
போத்ரா
போத்ரா

அதாவது, பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை செய்துவிடுவதாக பச்சமுத்து மிரட்டியதாக புகார் அளித்துள்ளார் போத்ரா.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பச்சமுத்து மீது தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article