நாகர்கோவில்:

ந்தி மொழி எங்கள் உயிர், அதை எதிர்ப்பவர்களை வெட்டி  வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமித்ஷாவின் தேசிய மொழி இந்தி தொடர்பான பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியது. சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு கருத்து மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், இந்தி மொழியை ஆதரித்து கருத்து பகிர்ந்திருந்தார்.

அதில், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!” என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. கடுமையான விமசர்னங்களையும் எழுப்பியது.

இந்த மிரட்டல் இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறி, திமுகவினர்  நட்டாலம் சிவின்குமார் மீது மார்த்தாண்டம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார், சிவின்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் சிவின்குமார் கைது செய்யடலாம் என்று கூறப்படுகிறது.

வன்முறையாக பதிவிட்ட சிவின்குமார் தீவிர எச்.ராஜாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.