கோவை: கோவை பகுதியில், பெரியாருக்கு எதிரான கருத்து பதிவிட்டது தொடர்பாக இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கொலை மிரட்டல் விடுத்ததாக இந்த அமைப்பின் பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில காலங்களாக இந்து கோவில்கள் திகவினரால் அவமதிக்கப்படுவதும், அதுபோல பெரியார் சிலை இந்து அமைப்பினரால் அவமதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ‘’பெரியார் சி்லையை உடப்பேன்’’என்று கோவையில் பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த மனோகரன் வாட்ஸ்அப்பின் அவர் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கொண்ட கள்ளப்பாளையத்தை சேர்ந்த பிரபு மனோகரனிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மனோகரன், அதைக்கேட்க நீ யார் என்று மனோகரன் கேட்க, பிரபு என்பவர் ‘’நான் பெரியார் பேரண்டா’’என்று சொல்லி எகிறியிருக்கிறார். இது தொடர்பாக இடையே நடந்த வாக்குவாதத்தில், கொலை செய்துவிடுவேன் என்று பிரபுவை மனோகரன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிரபு கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.