கடலூர்:
அதிமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருந்த முன் னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஏதும் கிடைக்காத நிலையில், இது ஐயப்பனுக்கு விடுத்த மிரட்டல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக பல இடங்களில் எதிர்க்கட்சியினரை குறி வைத்து ஐடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஐடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் இந்த ரெய்டு நடைபெறுவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இன்று கடலூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஐய்யப்பன் வீட்டில் இன்று ரெய்டு நடைபெற்றது.
ஐயப்பன் ஏற்கனவே கடந்த 2006 முதல் 2011 வரை திமுக எம்எல்ஏவாக இருந்தார். பின்னர், அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது, கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலை வராக இருந்து வருகிறார். இவருக்கும் அதிமுக அமைச்சர் எம்சி சம்பத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் சேர ஏற்பாடு நடைபெற்று வந்தது.
அதிமுகவில் தான் வகித்து பதவியை ராஜினாமா செய்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர இருப்பதாக கூறியவர், வரும் வியாழக்கிழமை கடலூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஐயப்பன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்கள் துணையுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
[youtube-feed feed=1]