சென்னை: வெளிமாநிலங்களில் சென்னைக்கு பல ஆயிரக்கணக்கான இறைச்சிகள் கொண்டு வரப்படும்  நிலையில், இன்று  சென்ட்ரல் ஸ்டேஷனில்  வந்திறங்கிய  1556  கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மாநகரில் அசைவ விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு தேவையான  சிக்கன், மட்டன், பன்றி இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவை அண்டைய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் அனைத்தும் தனியார் வாகனங்களில் கொண்டு வரப்பட்டாலும், அதிக அளவிலான பொருட்கள் ரயில் மூலமே ன்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுகிறது. இவ்வாறு வரும் இறைச்சிகளில் பெரும்பாலான இறைச்சிகள் கெட்டுபோய் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள பல அசைவ ஒட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தும்போது, கெட்டுபோன இறைச்சிகள் இருப்பது தெரிய வந்தால், அதை பறிமுதல் செய்வதுடன், ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில் அவ்வபோது உணவு பொருட்களால் சிலர் திடீர் மரணத்தை தழுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய இறைச்சி பார்சல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது,  டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை சோதனை நடத்தினர்.

அதில், 1556 கிலோ கெட்டு போன இறைச்சி  இருந்தது தெரிய வந்தது. அந்த  கெட்டுபோன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அழிக்க  உத்தரவிட்டனர்.

அவ்வப்போது பல ஆயிரம் கிலோ கெட்டுபோன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில்,   கடந்த ஆகஸ்டு மாதம்  21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த 600 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல ஏராளமான ஆட்டுக்கால்களும் கெட்டுபோன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.