சென்னை:
தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் என்றும், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை தமிழகத்தில் அமைந்துள்ளது என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
ஜெயின் சமுகத்தினர் சார்பில் பெரம்பூர் பழைய பிஅன்சி மில் வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஆர் சிட்டியில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் சார்பில் வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியை முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மன்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தொழில்முனைவோருக்காக ராஜ்பவன் கதவுகள் திறந்தே இருக்கும் என்றார்.
தொழில் தொடங்க உதவி தேவைப்பட்டால் தம்மை அணுகுமாறும், முதலமைச்சருடன் நட்பில் இருப்பதால் தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
மேலும் தமிழ் இனிமையான மொழி என்றும், தமிழகத்தில் வாழ்ந்து வரும் ஜெயின் சமூகத்தினர், தமிழ் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயின் சமூகத்தவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.