நந்தனம் YMCA மைதானத்தில் மார்ச் 29 சனிக்கிழமை மாலை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை காண்பித்து சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் கைகோர்த்திற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரசிகர்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து வருகிறார்களோ அதே இடத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் வகையில் பயண கட்டணமின்றி இலவசமாக ஒருமுறை வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை நிலையத்தின் தானியங்கி வாயில்களில் ஸ்கேன் செய்யலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (இரண்டு நுழைவுகள் மற்றும் இரண்டு வெளியேறல்கள்) பயன்படுத்தலாம் மற்றும் மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் மென்மையான நுழைவு மற்றும் வெளியேற ஸ்கேன் செய்யலாம், ”என்று CMRL செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தனத்திலிருந்து விம்கோ நகர் டிப்போ மெட்ரோ நிலையத்திற்கு கடைசி ரயில் இரவு 11.17 மணிக்கு புறப்படும். விமான நிலைய மெட்ரோ நிலையத்தையும் நோக்கி இரவு 11.37 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். மேலும், நந்தனம் மெட்ரோ நிலைய நுழைவு வாயில் அந்தந்த கடைசி ரயில்களுக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
“நந்தனம் மெட்ரோ நிலையத்திற்குள் பார்வையாளர்கள் இரவு 11 மணிக்கு முன் நுழைய வேண்டும். கிரீன் லைன் நிலையங்களுக்கு (டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரை) பயணிப்பவர்கள்: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் நோக்கி செல்லும் கடைசி ரயில் இரவு 11:16 மணிக்கு பதிலாக இரவு 11.52 மணிக்கு புறப்படும்,” என்று அந்தக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.