இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.05 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதை நான்கில் இருந்து எட்டு வாரங்கள் தள்ளிப்போடலாம் என்று ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டபின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்து நான்கில் இருந்து எட்டு வாரங்கள் ஆன நிலையில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், பிளாஸ்மா நோயாளிகள் உள்ளிட்டோர் இந்த இடைவெளியை பின் பற்ற வேண்டும்.