ஒட்டாவா
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் இருந்து அத்தியாவசிய பயணத்தை தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டினர் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
சமீப காலமாக கொரோனா பரவல் மேலும் அதிகரித்ததால் இந்த தடை ஜூலை 21 முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாட்டில் தளர்வுகள் அறிவித்துள்ளார். அதன்படி அவர் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறி உள்ளார்,
அவர், “இன்னும் சில நாட்களுக்கு கனடாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் அனுமதிக்க போவதில்லை. மேலும் அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டும் அதுவும் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே கனடாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போதைய தடை ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும். அடுத்த கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்படும் போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க உத்தேசித்துள்ளோம்ம். வரும் வாரங்களில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். ’ எனத் தெரிவித்துள்ளார்.