
சென்னை :
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டித்து சென்னை முழுவதும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மாநகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொற்றுநோய் மருத்துவமனை அருகே திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக உள்பட கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேவேளயில் மற்றொரு பிரிவினர் எழும்பூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றன்ர.
[youtube-feed feed=1]