பெங்களூரு:
பெங்களூரு வேதாந்தா நிறுவனம் முன்பு தமிழ் அமைப்புகள் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள வேதாந்த அலுவலகம் முன்பு தமிழ் மற்றும் கன்னட அமைப்பினர் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையினர் கன்னியமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்தும், போராடியும் வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வேதாந்தா நிறுவன அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
போராட்டத்தின்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு காரணமான ஆட்சியர் மற்றும் எஸ்.பியை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.