மனைவி டார்ச்சரால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த 13 நிமிட குறும்படம் ‘தூண்டில் ஆண்கள்’.
சத்யமூர்த்தி என்கிற இளைஞரை, அவரது மனைவி டார்ச்சர் செய்கிறார். தான் பலருடன் பழகுவதை கண்டுகொள்ளக் கூடாது என்கிறார்சத்யமூர்த்தி, இதைத் தட்டிக்கேட்கவே, அவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
சத்யமூர்த்தியின் வழக்கறிஞருக்குத் தெரியாமல் அவரை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துருகிறார்கள் காவலர்கள்.
அங்கே இருக்கும் பெண் காவலர்கள், சத்யமூர்த்தியை மிரட்டுவதோடு, அவமானப்படுத்துகிறார்கள். அவரது மனைவிக்கு சாதகமாக பேசுகிறார்கள்.
தவிர சத்யமூர்த்தி மீது அபாண்டமாக ஒரு பழியை சுமத்துகிறார் அவரது மனைவி.
இறுதியில், மனைவி மற்றும் மகளிர் காவல் நிலைய காவலர்கள் டார்ச்சர் காரணமாக, காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்துகொள்கிறார் சத்யமூர்த்தி.
மகளிர் காவல் நிலையத்தில் ஆண்கள் படும்பாடு இப்படித்தான் இருக்குமோ என்று அந்த காட்சிகள் எண்ண வைக்கின்றன.
பெண்காவலரும், சத்யமூர்த்தியும் பேசும் காட்சி:
“ஒழுங்கா வேலை செய்வியா?”
“செய்வேன் மேடம்.. வேணும்னா கம்பெனியில வந்து கேட்டுப் பாருங்க!”
“உன் கம்பெனிதான்யா புகாரே கொடுத்திருக்கு… அதான் உன் மனைவி!”
அடுத்து ஒரு வசனம்:
“உன் புருசன் அவன் அம்மா கூட படுத்திருந்ததை பார்த்தேன் என எழுதிக்கொடு, நான் அவனைப் பார்த்துக்கிறேன்”
அதே நேரம், எல்லா காவலர்களும் மோசமல்ல என்பதைக் குறிப்பதுபோல, “அந்த ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டர் மட்டும்தான் நேர்மையானவங்க” என்கிற வசனத்தையும் வைத்திருக்கிறார்கள்.
குறும்படத்தின் இறுதியில், வழக்கறிஞர் அருள்துமிலன், “பெண்களின் புகாரின் பேரில் ஆண்களை காவல் நிலையத்தில் விசாரித்தால், உடன் ஒரு ஆண் காவல் அதிகாரி இருக்க வேண்டும், பெண்கள் செய்யும் கொடுமைகளை விசாரிக்க ஆண்கள் காவல் நிலையம் வேண்டும், திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் ஆண் தற்கொலை செய்தால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை விசாரிக்க வேண்டும்!” என்கிறார்.
பாதிக்கப்பட்டவருக்கு எதிராக செயல்படுவது, அவரது வழக்கறிஞருக்கு தெரியாமல் காவல் நிலையம் அழைத்து வருவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மிரட்டுவது என மகளிர் காவல் நிலையம் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கிறது இந்த குறும்படம்.
அதோடு, பெண்களால் ஆண்கள் பாதிகப்படுவதும் நடக்கிறது என்பதைச் சொல்கிறது.
வழக்கறிஞர் எஸ்.மதுசூதனன் இயக்கி நடித்திருக்கிறார். அவர், “உண்மை நிகழ்வையே படமாக்கி இருக்கிறோம். இதுபோல பல சம்பங்கள் நடக்கின்றன. இனியாவது பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார்
குறும்படம்: