சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளை விட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில இடங்கள் மிக அதிக மழையைப் பதிவுசெய்துள்ளன என  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்..

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாலுமூக்கில் 2057 மி.மீ., ஊத்து 2075 மி.மீ., (நெல்லை மாவட்டம்) பதிவாகியுள்ளது

இன்று முதல் நாளை காலை வரை, இந்த அமைப்பிலிருந்து ஒரு இறுதி வலுவான மழைப் பொழிவு டெல்டா மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் பொழுதில் மழை படிப்படியாகக் குறையும். இந்த மாவட்டங்களில் நாள் முழுவதும் மற்றும் இரவு வரையிலும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை (TNSDMA) வெளியிட்டிருந்த கனமழை அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சில மணிநேரங்களிலேயே ‘டபுள் செஞ்சுரி’ மழைப் பதிவை (200 மி.மீ-க்கு மேல்) எளிதாகத் தொடும் வல்லமை படைத்த இடங்களாக மாஞ்சோலை உள்ளது என பிரதீப் ஜான் தனது தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை  தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  வெங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில்,  சீசனில், நெல்லை மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதி 2057 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. இதை விட இன்னும் அதிக மழைப்பொழிவை ஊத்து பகுதி பதிவு செய்துள்ளது. ஊத்து பகுதி 2075 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் (TNSDMA) சமீபத்திய கனமழை அறிக்கையின்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

அதி கனமழை (204.4 மி.மீ-க்கு மேல்) பதிவான நிலையங்கள்:

நாலுமுக்கு (அம்பாசமுத்திரம், திருநெல்வேலி) – 256.00 மி.மீ

ஊத்து (அம்பாசமுத்திரம், திருநெல்வேலி) – 250.00 மி.மீ

கக்கச்சி (அம்பாசமுத்திரம், திருநெல்வேலி) – 225.00 மி.மீ

மாஞ்சோலை (அம்பாசமுத்திரம், திருநெல்வேலி) – 210.00 மி.மீ

அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்தியாவிலேயே அதிக மழை நெல்லை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர், டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழ்நாடு வரை ஒட்டுமொத்தமாக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக மஞ்சோலை நிலையங்களில் மீண்டும் இரட்டைச் சதம் (200 மி.மீ மேல்) மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழை மொத்தக் கணக்கு மீண்டும் மிகை மண்டலத்திற்குள் நகர்ந்துள்ளது.