டெல்லி:

மூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெண்கள் தினத்தன்று மட்டும் தனது சமுக வலைதள கணக்குகளை நிர்வகிக்க பெண்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சமூக வலைதளங் களை பயன்படுத்துவது உறுதியாகி உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல்மயமாக மாற்றி வரும் பிரதமர் மோடி, மக்களையும் டிஜிட்டல் உலகில் சஞ்சரிக்க அழைப்பு விடுத்து வருகிறார்… பல்வேறு சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி தனது கருத்துக்களை தெரிவித்து வரும் மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமையுடன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்பில் இருந்து தனது  ஊடக கணக்குகளை விட்டுவிட நினைத்திருப்பதாக நேற்று டிவிட் போட்டிருந்தார்.

மோடியின் அறிவிப்பு நாடு முழுவரும் நெட்டிசன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து,  ‘No Sir’ என்று ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது.

இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் மோடி.

அதில், பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்க்கையில் முன்னேறிய பெண்களை கரவுவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அதனப்டி பெண்கள் தினமான வரும் 8ந்தேதி தனது  சமூக வலைதள கணக்கை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு  வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பெண்கள் #sheinspiresUS என்ற ஹேஷ்டேக்கில் சாதனையை பதிவிடலாம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் பிரதமரின்  சமூக வலைதள கணக்கை ஒரு நாள் முழுவதும் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்படும்  என்று தெரிவித்து உள்ளார்.

மோடியின் இந்த அறிவிப்பு காரணமாக, அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகமாட்டார் என்பது தெளிவாகி உள்ளது.