அவனுக்கென்ன ஓடிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா.. என்ற சினிமா பாடல் ஒன்று உண்டு. அது போல நடந்திருக்கிறது ஒரு உண்மை சம்பவம்.
உத்திரப் பிரதேசத்தில் பிலிபித் பகுதியில் வசிக்கும் ஏழை விவசாயி மன்மோகன்சிங். எட்டு ஏக்கரில் கோதுமை விவசாயம் செய்து வருகிறார். கோதுமையை அரசுக்கு விற்பார். அதற்கான தொகை அவரது (பேங்க் ஆப் பரோடா) வங்கக்கணக்கில் வரும்.. ஏதோ ஜீவனம் போய்க்கொண்டிருந்தது.

அவர் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து திடீரென ஒருநாள் நோட்டீஸ் வந்தது. “விஜயமல்லையா என்பவர் பெருந்தொகை வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார். நீங்கள்தான் அவருக்கு ஜாமீன் போட்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களது வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது” என்றது அந்த நோட்டீஸ்.
விவசாயி மன்மோகன் சிங் பதறிப்போய்விட்டார். “விஜய்மல்லையா பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர.. அவரை நேரில் சந்தித்தே இல்லையே… அவருக்கு நான் ஏன் ஜாமீ்ன் போடப்போகிறேன்” என்று புலம்பினார்.
ஆனால் வங்கி அதிகிரிகள் கேட்பதாய் இல்லை.
இப்போது அவரது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிட்டதால், அரசிடம் கோதுமையை விற்க முடியவில்லை. ஆகவே தனியாரிடம் குறைந்தவிலைக்கு விற்கிறார்.
“ஏற்கெனவே குறைந்த வருமானம்.. இப்போது அதைவிட குறைந்த வருமானம்.. என்ன செய்தென்று தெரியவில்லை” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் இந்த அப்பாவி விவசாயி.
Patrikai.com official YouTube Channel