மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,, “ இது தான் பிரதமராக தான் பேசும் கடைசி உரை” என்று உருக்கமாக பேசியுள்ளார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் பிரதமராக மே மாதம் இதே நிகழ்ச்சியில் பேசுவதாக மோடி தெரிவித்துள்ளார்.

modi

2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்னும் ’மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் வானொலியி நேரடியாக பேசி வருகிறார். அதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடியின் 53வது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இதில் பேசிய பிரதமர் மோடி, “ கனத்த இதயத்துடன் இன்று உரையை தொடங்குகிறேன். 10 நாட்களுக்கு முன்பு நமது தேசம் தைரியமான 40 வீரர்களை இழந்துள்ளது. புல்வாமா தாக்குதலால் நாட்டு மக்கள் மிகுந்த துயரமும், கோபமும் கொண்டுள்ளனர். நமது வீரர்களின் உயிர் தியாகம் பயங்கரவாதிகளின் அடைப்படை தளத்தை தகர்தெறியும்.
துணிச்சலான வீரர்களின் உயிர் தியாகம், நாடு முழுவதும் நம்பிக்கையையும், வலிமையையும் ஏற்படுத்தும்.

இவ்வளவு நாட்களாக தேசிய போர் நினைவகம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. அதனால் புதிய நினைவகம், இந்தியா கேட் மற்றும் அமர்ஜவான் ஜோதி இடையே அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவகம், தைரியமிக்க நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருக்கும். இந்த நினைவகம் நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இன்னும் சில வாரங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரதமராக மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை. மக்களவை தேர்தல் வர இருப்பதால் அதில் வேட்பளாராக போட்டியிடுகிறேன். அதனால் இன்னும் 3 மாதங்கள்ளுக்கு பிறகு தான் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச முடியும். அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி மே மாதம் 26ம் தேதி நடைபெறும்” என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.