மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்டம், தெலுங்கு படமான ‘பாரத் அனி நேனு’ என்பதன் தாக்கத்தினால் கொண்டுவரப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்தாண்டு வெளியான அந்தப் படத்தில் மகேஷ்பாபுதான் கதாநாயகன். அப்படத்தில் கதாநாயகன் முதலமைச்சர் ஆகிவிடுவார். முதலமைச்சர் ஆகும் அவர், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களை விதிப்பார்.

இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கம். எனவே, இந்திய அரசு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுதான் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறதா? என்று சமூகவலைதளங்களில் கிண்டலான கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டா? அரசு இப்படி முடிவெடுக்கும்? என்ற கமெண்டுகளும் விழுந்துள்ளன. குர்கோனில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஸ்கூட்டி ஓட்டிவந்த ஒருவருக்கு ரூ.23000 அபராதம் விதிக்கப்பட்டது இந்த வார தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.