சென்னை :

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினம் முதல் மூன்று நாட்களுக்கு சுயம்புவாக காட்சி தரும் கவசதிறப்பு விழா நடைபெறும்.

நேற்று கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மாலை 7 மணிக்கு கவசத்திறப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து.

இன்றும் நாளையும் (30-11-2020 மற்றும் 1-12-2020) இரண்டு நாட்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

நாளை இரவு 9 மணிக்கு மீண்டும் கவசம் போர்த்தப்பட்டு மறுநாள் முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் சிறப்பு ஆராதனையும், புனுகு சாம்பிராணி தைல அபிஷேகமும் நடைபெறுவதால் புற்றுருவாக அமைந்திருக்கும் ஆதிபுரீஈஸ்வரரைக் காண திரளான பக்தர்கள் வருவதுன்டு, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.