ஹரித்துவார்:
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது.
பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன் 30-ம் தேதி திருவள்ளுவரின் சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. ஹரித்துவாரின் கங்கை கரையோரம் 12 அடி உயர சிலையை திறக்க சில மதவாத அமைப்புகள் ஏதிர்ப்பு தெரிவித்தனர்.
 

இதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு வைக்கப்படது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கடும் ஏதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை நேற்று மாலை 5 மணியளவில் திறந்து வைத்தார். ஹரித்வாரில் கங்கைக் கரை ஓரம் திருவள்ளுவர் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Tamil Saint Thiruvalluvar’s Statue unveiled in Uttarakhand. CM Harish Rawat unveiled the statue yesterday evening.