சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேவி.தங்கபாலு உள்பட  10 பெருந்தகையாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 பெருந்தகையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கினார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் 10 பெருந்தகையாளர்களுக்கு  திருவள்ளுவர் தினம் விருது வழங்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதாளர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விருது வழங்கி கவுரவித்தார்.

அதன்படி,   அய்யன் திருவள்ளுவர் விருது – மு.படிக்கராமு, பேரறிஞர் அண்ணா விருது – தஞ்சை கீழையூர் எல். கணேசன், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பேரறிஞர் அண்ணா விருது – தஞ்சை கீழையூர் எல். கணேசன், பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி, தமிழ் தென்றல் திரு.வி.க. விருது – ரவீந்திரநாத், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது – வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – எம்.பி. ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி உள்ளிட்டோருக்கு விருதுகளையும் பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தார்.

இந்த  விருதுவுடன் அதற்கான தகுதி உரை, காசோலைகள் மற்றும் தங்கம் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.