திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேவா டிக்கட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இணைய தளம் மூலமாகப் பக்தர்கள் பல சேவைகளுக்குக் கட்டணம் செலுத்தி வந்தனர்.  சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவை, நன்கொடை தரிசனம், வாடகை அறைகள் எனப் பல வசதிகளுக்கும் பக்தர்கள் இணையம் மூலம் பதிவு செய்து வந்தனர்

தற்போது இந்த இணைய தள முகவரியை மாற்றி புதிய இணைய தள முகவரியைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  பக்தர்கள் இனி https:/tirupatibalaji.ap.gov.in என்னும் முகவரியின் மூலம் தரிசன டிக்கட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது 23.05.2020 சனிக்கிழமை முதல் இந்த இணைய தளம் செயல்பட உள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]