சென்னை: மொழிக்கொள்கையில் விசிக  தலைவர் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி தர மத்திய அமைச்சர் மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியாளர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கையின்படி தமிழ், ஆங்கிலம் உடன் மற்றொரு மொழி படிக்க அனுமதிக்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளிலும் மும்மொழி கற்க ஆவன செய்ய வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என கூறி, நிதி வழங்க மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், பாஜக தரப்பில், மும்மொழி குறித்து பேசி வருகிறது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களை வெளியிட்டு, ஆட்சியாளர்களையும்,  அரசியல்வாதிகளையும் கடுமை யாக சாடி வருகிறார்.

ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் மகள் நடத்தும் சன்சைன் பள்ளியில் மும்மொழி கொள்கையின்படி இந்தி உள்பட பல மொழிகள் பயிற்று விக்கப்படுவதை சுட்டிக்காட்டியதுடன், கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பையன், தமிழ் படிக்காமல் பிரெஞ்சு மொழியை படித்து வருவதையும் எடுத்துரைத்தார். அதுபோல நடிகர் விஜய் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளி விவரங்களையும் வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது  விசிக தலைவர் திருமாவளவன் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

 இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?  என கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக,  பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.

https://x.com/annamalai_k/status/1892418765016748181

[youtube-feed feed=1]