புதுக்கோட்டை: முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு திருமாவளவன் எங்கும் செல்ல மாட்டார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர் விசிக தலைவர் திருமாவளவன். இவர் சமீப நாட்களாக ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில், திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ‘பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில், சம்பந்தப்பட்டவர் களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது’ என்று முதலமைச்சர் ட்வீட் செய்திருந்த நிலையில், `சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என திமுக அரசுக்கு எதிராக கூறியிருந்தார். இதுவும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். இதில் கலந்துகொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,. செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து வீடுகள் கட்ட முடியாது அந்தத் தொகை போதாது. குறைவான தொகை தான் கொடுத்து வருகிறார்கள் அதனால் அந்த திட்டத்தில் வீடு கட்டுபவர்கள் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதனால், வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியவர், மத்தியஅரசின் திட்டத்தை மாநில அரசு நிதி ஒழுங்காக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்றார். மேலும், . கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு போதுமான அளவில் நிதி உள்ளது என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், திருமாவளவன் யாரை வேண்டுமானாலும் மாநாட்டுக்கு அழைத்திருக்கலாம் . ஆனால் தலைவர் தளபதியோடு நெருக்கமாக இருக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர். திருமாவளவன் என்றும் தளபதியை விட்டுப் போக மாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதுபோல, புதிதாக FL2 என்ற பெயரில் தனியார் அதிகம் மது கடைகளில் திறப்பது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே இருந்த மதுபான கடை பகுதியில் புதிதாக டெக்கரேட் பண்ணி நவீனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு கூடுதலாக தான் விற்பனை செய்வார்கள் அங்கே ஏன் செல்ல வேண்டும் என்று சிரித்தபடியே பேசிவிட்டு சென்றார்.