துரை

விசிக தலைவர் திருமாவளவன் பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறியுள்ளார்/

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கூட்டணி மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன.  தற்போது மீண்டும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இணைந்துள்ளது. பா.ன.க மற்றும் தேமுதிக கட்சிகள் எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மதுரையில்   தி.மு.க. கூட்டணி கட்சியான வி.சி.க தலைவர் திருமாவளவன்,

“அரசியலில் நிதானம், பொறுமை, தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நம் பகைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கத் துணிவு தேவை. கூட்டணி குறித்து தெளிவாக இருக்கிறோம். பா.ஜ.க, பா.ம.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருக்காது. இதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். அ.தி.மு.க.வோடு சேரலாம் பிரச்னையில்லை.

ஆனால் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் அது முடியாது. பா.ஜ.க, பா.ம.க இருக்கும் அணியில் ஒருபோதும் நாங்கள் சேரமாட்டோம். இப்படி எல்லா கதவுகளையும் மூடிவிட்டால் எப்படி கூட்டணி பேரம் பேசுவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி பேரம் பேசுவதற்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை”

என்று கூறியுள்ளார்.