சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்  பெய்து வரும் சாதாரண மழை காரணமாக, தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை. ஏற்கனவே இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், தகுந்த நடவடிக்கை எடுக்காததால், வணிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

கொரோனா கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் மாறியதால், அதை மூடிவிட்டு தற்காலிக சந்தை பூந்தமல்லி அருகே திருமழிசையில் அமைக்கப்பட்டது. இந்த சந்தை கடந்த மே மாதம் 10ந்தேதி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஆனால், தமிழக்ததில் அவ்வப்போது பெய்து வரும் சிறுமழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சந்தை சேரும் சகதியுமாக மாறி வருகிறது.  இதனால் வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் முழுவதும் குளம்போல தண்ணீர் தேங்கியதால், வெங்காயம் உள்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்க் அழுகி லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தின. இது குறித்து வியாபாரிகள் பலமுறை முறையிட்டும், இதுவரை சரியான முறையில் நிர்வகிக்ப்படாமல் இருந்து வருகிறது.
தற்போது நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மார்க்கெட் முழுவதும் மீண்டும் குளம்போல தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும்  காய்களை பாதுகாப்பாக  வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகளின் மழை நீரால் பாதிக்கப்பட்டு அழுகியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதும் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திருமழிசை மார்க்கெட்டால் தினசரி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல வியாபாரிகள், அங்கு கடைகளை திறக்க முன்வராத நிலையில் நீடித்து வருகிறது. மேலும், தமிழகஅரசு உடடினயாக கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி  உள்ளனர்.

திருமழிசை தற்காலிக சந்தை விவகாரத்தில் தமிழகஅரசு கண்ணாமூச்சி ஆடுவது குற்றம் சாட்டும் வணிகர்கள், விரைவில் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்காவிட்டால், ஒட்டுமொத்தமாக திருமழிசை மார்க்கெட்டை புறக்கணிக்க இருப்பதாகவும்  தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால், சென்னையில் காய்கறி தட்டுப்பாடு  ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு கண்திறக்குமா?