பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்…
ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2 மாதங்களாக மூடிக்கிடக்கிறது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் போது, கோயில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயிலைத் திறக்க அனுமதி கேட்டு ஆந்திர அரசுக்குக் கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
’’ கோயில் மீண்டும் திறக்கப்படும் போது, ஆரம்பத்தில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பெருமானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி.
( சாதாரண நாட்களில் பொதுவாக ஏழுமலையானைத் தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்வது வழக்கம்)
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கும் நோக்கில் பக்தர்களைக் குறைந்த அளவில் அனுமதிக்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
’’கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் தெர்மல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கேயே அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்’’ என்றும் சுப்பாரெட்டி கூறினார்
.
– ஏழுமலை வெங்கடேசன்