1986 லா பேட்ச் மீடியா புரடக்சன் தயாரிக்கும் முதல் படமான திரு வாக்காளர் பட பூஜை என்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன் ,லியாகத் அலிகான்,ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார் ,E.ராம்தாஸ், நடிகர்கள் நட்டி எ நடராஜ், ஆரி,அபி சரவணன், வையாபுரி ,ராம்ஜி,
தயாரிப்பாளர்கள் m.m.தாஹா, P.T.செல்வ குமார்,பொன்னுமணி மஞ்சுநாத் ரவி,கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், சண்டை பயிற்சியாளர்கள் தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்:
சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம் அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியே இப்படம் என கூறினார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.