சென்னை
வரும் ஜூலை 11, 12 தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்குப் பிறகு மூன்றாம் நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளார்.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பிறகு நீதிமன்ற உத்தரவின்படி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.
அமைச்சர் மனைவி மேகலா தனது கணவரை அமலாக்கத்துறை சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளதாகக் கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்துள்ளார். தவிரச் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு அளிக்கப்பட்ட மனுவில் இரு நீதிபதிகளும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இந்த வழக்கு தற்போது மூன்றாம் நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த மூன்றாம் நீதிபதியாக சி வி கார்த்திகேயனை நியமித்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் கபில்சிபல் வாதாட உள்ளதாக அவர் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அவை,
அமலாக்கத்துறையினருக்கு பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு செல்லுபடி ஆகுமா?
அமைச்சர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் முடிந்த பிறகும் அமலாக்கத்துறை அவரை காவலில் வைத்து விசாரிக்க முடியுமா?
ஆகியவை ஆகும்.